ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ஹரி, விக்ரம் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் சாமி ஸ்கொயர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
ஜுன் மாதம் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது வரை 1.5 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிரைலர் மாலை வெளியிடப்பட்டது.
2.08 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் ஒரு சாமி, இரண்டு சாமி.... என ஆறுச்சாமியின் ஆக்ரோஷமான பேச்சில் ஆரம்பிக்கும் டிரைலர், அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலருக்கும் ரசிகர்கள் வரவேற்பை கொடுத்துள்ளனர்.