'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரொமான்டிக் நாயகியாக நடித்து வந்தபோது பாடல் காட்சிகளில் வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர் சமந்தா. சமீபகாலமாக கதையின் நாயகியாகியாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள சீமராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா, சிலம்பம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக நடித்துள்ளார். இதுபற்றி சமந்தா கூறுகையில், முதன்முறையாக ஒரு கதாபாத்திரத்திற்காக நான் பல மாதங்கள் பயிற்சி எடுத்தது இந்த சிலம்பாட்ட வேடத்திற்காகத்தான். இதுபோன்று மாறுபட்ட கதாநாயகியாக நடிக்கும்போது மாறுபட்ட திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. சீமராஜாவில் நடித்தது மனதளவில் திருப்தியாக அமைந்துள்ளது என்கிறார் சமந்தா.