விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஹாலிவுட்டில் ஒரு படம் வெளிவருதற்கு முன்பு அதன் 25 நிமிட காட்சிகள் மீடியாவுக்கும், படத்தை மார்க்கெடடிங் செய்பவர்களுக்கும் போட்டுக்காட்டுவது வழக்கம். அந்த வழக்கம் இப்போது தமிழ் சினிமாவிற்கும் வந்திருக்கிறது. அதை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. தான் நடிக்கும் படங்களில் முதல் 25 நிமிட காட்சிளை வெளியிட்டு வருகிறார். தற்போது அதே பாணியில் வருகிற 7ந் தேதி வெளிவர இருக்கும் வஞ்சகர் உலகம் படத்தின் 25 நிமிட காட்சிகள் திரையிடப்பட்டது.
லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் வஞ்சகர் உலகம். குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் மனோஜ் பீதா கூறியதாவது:
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன. சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் இந்த படம். மேற்கத்திய தாக்கத்தில் படம் இருக்க திட்டமிட்டு உழைத்தோம். 4 மணி நேரம் இருந்த படத்தை எடிட் செய்து 2 மணி நேர படமாக மாற்றியிருக்கிறோம். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. என்றார் இயக்குனர் மனோஜ் பீதா.