'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிக் பாஸ்' புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் ஜோடியாக சேர்ந்து நடித்து வெளியான படம் ' பியார் பிரேமா காதல்'. அந்தப் படம் தமிழில் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அதை இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவாகிய இப்படத்துக்கு, எல்லா தரப்பிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் படம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைக் கண்டு மகிழ்ந்து போன யுவன், படத்தின் இயக்குநர் இளனுக்கு கார் பரிசளித்து, அன்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், பியார் பிரேமா காதல் படத்தை, இந்தியில் ரீமேக் செய்ய ' அலிகார்', ' சர்ப்ஜித்' போன்ற படங்களை தயாரித்த சந்தீப் சிங், தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாகவும், அவருக்கு அந்த உரிமையை தயாரிப்பாளர் தரப்பு வழங்கி விட்டதாகவும், கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.