அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததால் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு, குறுகிய காலத்தில் அவர் தமிழை கற்றுக் கொண்டார். அதனால் மொழிப்பிரச்சினை இல்லாத நடிகை தேடும் இயக்குனர்களுக்கு நந்திதா பேவரிட் நாயகியாகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது 7 என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் நந்திதா. இந்த படத்தில் ஹரிஸ் என்ற புதுமுக நடிகர் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு சுத்தமாக தமிழ் தெரியாதாம். அதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அவருக்கு அவ்வப்போது தமிழ் கற்றுக்கொடுத்துள்ளார் நந்திதா. ஆக, ஒரு கன்னட நடிகை ஒரு நடிகருக்கு தமிழ் கற்றுக்கொடுத்திருக்கிறார்.