பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று விடியற்காலையில் வெளியானது. அஜித் தீவிரமான சாய்பாபா பக்தர் என்பதால் அவர் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட வெளியீடுகள் கடந்த சில படங்களாக வியாழக்கிழமைகளில் தான் நடந்து வருகிறது. பொதுவாக நள்ளிரவில் தான் அந்த வெளியீடு நடக்கும். 'விஸ்வாசம்' படத்திற்காக விடியற்காலையில் முதல் பார்வை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
போஸ்டரில் இடம் பெற்றுள்ள இரண்டு அஜித் போஸ்டரைப் பார்த்ததும் அஜித் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் என்று அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், படக்குழுவினர் அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இரு வேடங்களில் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அப்படி இரு வேடங்களில் இருந்தால் 'சால்ட் பெப்பர்' தோற்றத்தில் இருக்கும் அஜித் அப்பாவா அல்லது அண்ணனா, இளம் தோற்றத்தில் இருக்கும் அஜித் மகனா அல்லது தம்பியா என்றும் சந்தேகம் வரலாம்.
அஜித்தின் ரசிகர்கள் ஒரு பக்கம் முதல் பார்வையின் தோற்றம் 'மாஸ்' ஆக உள்ளது என பாராட்டிக் கொண்டிருக்க, எதிர்கோஷ்டி 'சால்ட் பெப்பர்' தோற்றத்தைப் பார்த்து 'ஜில்லா' மோகன்லால் மாதிரி உள்ளது என்றும் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படம் வெளிவரும் பொங்கல் வரை அஜித் இரு வேட சஸ்பென்ஸ் கண்டிப்பாக நீடிக்கும்.