அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
டிக் டிக் டிக் படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் 'அடங்க மறு' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன், போகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவி போலீஸாக நடித்துள்ள படம் இது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் டீஸர் வெளியானது. அடங்கமறு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு 'தீரன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சத்ய சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு முன்னணி டிவி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அடங்கமறு சாட்டிலைட் ரைட்ஸை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளதாம் விஜய் டிவி.