டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கதையில் ஒருவனுக்கு விபத்து ஏற்பட்டு வாழ்வில் சில நாட்கள் மறந்து விடும். அந்த கதைக்கு நிஜமான சொந்தக்காரர் அதே படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். அவரின் வாழ்க்கையில் நடந்ததுதான் சினிமா ஆனது. பிரேம்குமார் பசங்க, வர்ணம், சுந்தரபாண்டியன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இப்போது அவர் இயக்கி வரும் படம் 96.
விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், தேவதர்ஷினி உள்பட பலர் நடிக்கிறார்கள். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார், கோவிந்த் மேனன் இசை அமைக்கிறார். படத்தின் கதை இதுதான்.
விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள், அப்போது சிறுவர், சிறுமிகளுக்குள் வரும் பாலின ஈர்ப்பு இருவருக்கும் உண்டு. ஆனால் அது காதல் இல்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது தங்களின் மலரும் நினைவுகளை அசை போடுகிறார்கள். பள்ளிக்கு பிறகான தங்கள் வாழ்க்கையை பேசுகிறார்கள். அது சுவாரஸ்யமான காட்சிகளாக விரியும். பள்ளி பருவத்தில் நடந்த ஒரு ரகசியம் இப்போது தான் அவர்களுக்கு தெரியவரும். அது அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பிய ரகசியம். அது என்ன அது எப்படி அவர்கள் வாழ்க்கையை திருப்பிப்போட்டது. இப்போது அதுகுறித்து இருவரும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. அந்த ரகசியம் நடந்த ஆண்டு 96 என்பதால் படத்திற்கும் அந்த தலைப்பு.