ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது.
மேலும், தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானபோது விஜய் புகைப்பிடித்த படி காட்சி கொடுத்தது சர்ச்சைகளையும், வழக்குகளையும் சந்தித்தது.
இந்த நிலையில், சர்கார் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 13-ந்தேதி அன்று வெளியாகயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாகும்.