இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்தப்படத்தின் இயக்குநருக்கு கார் பரிசளிப்பது தமிழ் நடிகர்களுக்கு புதுசல்ல. ஏற்கனவே விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் இதுபோன்று இயக்குநர்களுக்கு கார் பரிசளித்துள்ளனர்.
அந்தவகையில் கடந்தவாரம் யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பாக, அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் வெளியான படம் பியார் பிரேமா காதல்.
லிவிங் டு-கெதர் வாழ்க்கையை பற்றி இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றாலும் இளைஞர்களை கவர்ந்துள்ளது. இதனால் படமும் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றுள்ளது. இதனால் யுவன், ஹரிஷ், ரைசா, இளன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் தனது முதல் பட தயாரிப்பே வெற்றிகரமாக அமைந்திருப்பதால் இயக்குநர் இளனுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.