திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விஜய் சேதுபதி தயாரித்துள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' படம் தொடங்கப்பட்டு சில வருடங்களாகின்றன. என்ன காரணத்தினாலோ அந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தார் விஜய் சேதுபதி.
படப்பிடிப்பு முடிவடைந்து, மற்ற வேலைகளும் முடிவடைந்தும் கூட நீண்டகாலமாக ரிலீசாகாமலே இருந்தது 'மேற்கு தொடர்ச்சி மலை'. இந்த படத்தை இயக்கியுள்ள லெனின் பாரதியே மேற்கு தொடர்ச்சி மலை படம் வெளிவரும் என்ற நம்பிக்கையை இழந்தேவிட்டார்.
இந்நிலையில் தான் அவரே எதிர்பார்க்காத வகையில் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தையும் மிக விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார் விஜய்சேதுபதி. அதன்படி இந்தப் படத்தை அடுத்த வாரம், அதாவது வருகிற 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்.
காயத்ரி கிருஷ்ணா, ஆண்டனி வாத்தியார், ஆறுபாலா, ஊத்து ராசா உட்பட பலர் நடிக்கும், இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின்' ஜுங்கா' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் சில விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமாம். அதை ஈடுசெய்யவே, மேற்குத்தொடர்ச்சி மலை படத்தை வெளியிடும் முடிவை விஜய்சேதுபதி எடுத்ததாக தெரிகிறது.