விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
அட்டக்கத்தி படம் மூலம், திரையுலகிற்கு நாயகனாக வந்தவர் தினேஷ். நீண்ட இடைவேளைக்கு பின், அவர் நடித்துள்ள, அண்ணனுக்கு ஜே படம் வெளியாக உள்ளது. திரையுலக அனுபவம் குறித்து அவருடன் பேசியதிலிருந்து:
'அண்ணனுக்கு ஜே' படம் தாமதம் ஏன்?
அண்ணனுக்கு ஜே படம், நான்கு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்தது. அட்டக்கத்தி படத்திற்கு பின் எனக்காக உருவான படமாக அமைந்துள்ளது. படத்தில் நடிக்க துவங்கியபோது, கதை தெரியாது. 'லவ்வர் பாயாக' ஆரம்பித்து, போக போக அரசியல் படமாகி விட்டது. தாமதமானாலும், பொருத்தமான நேரத்தில் வெளியாகும் படம் இது.
படத்தில் அரசியல், 'டயலாக்' இருக்கா?
'பூவே செம்பூவே...' பாடலில் நடித்த ராதாரவியை, தியேட்டரில் சின்ன வயதில் பார்த்துள்ளேன். இந்த படத்தில், அவருடன் நடித்தது, ஜாலியாக இருந்தது. அரசியல் டயலாக், படம் முழுக்க இருக்கிறது.
கதையில் உங்கள் பாத்திரம் என்ன?
படத்தில், மட்ட சேகராக நடித்துள்ளேன். மட்ட சேகர் எல்லா கட்சியிலும் உள்ள ஆள் தான். ஒவ்வொருவரின் அருகிலேயே உள்ள ஆள் தான். படம் பார்க்கும் போது புரியும்.
திடீரென அரசியல் படத்தில் கமிட் ஆனது ஏன்?
என் எல்லா படத்திலும் அரசியல் இருந்தது. அட்டக்கத்தி, திருடன் போலீஸ், விசாரணை என ஒவ்வொரு படத்திலும் அரசியல் இருக்கிறது.
உங்களுடன் நடித்த நடிகையரில் யாரை பிடிக்கும்?
என் கூட நடித்த நாயகியர் அனைவரும் யதார்த்த மானவர்கள் தான். திடீரென மரம் ஏற வேண்டும் என்றாலும் ஏறுவர். அப்படி தான் மகிமாவும். உடன் நடிக்கும் நாயகியருக்கு ரொம்பமரியாதை கொடுப்பேன்.
இதுவரை நடித்த படங்களில் 'கெட்டப் சேஞ்ச்' எதுவும் பெரிய அளவில் இல்லையே?
தாடியிலேயே நிறைய, கொஞ்சம் என கெட்டப் மாற்றி, நடித்து வருகிறேன். எனக்கான கதையும் அப்படி தான் அமைகிறது. அடுத்த இரண்டு படங்களும்
வித்தியாசமாக இருக்கும்.
அரசியல் ஆசை இருக்கா?
நல்லது நடக்கணும்; மாற்றம் வேணும் என்ற ஆசை இருக்கு. நல்ல தலைவர் இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நல்ல மாற்றம், அரசியல் மூலமாக தான் நடக்கும். என் படத்தில் செய்யும் சின்ன வேலை கூட, மக்களை துாண்டி விடும். அந்த வகையில் நான் என் பங்களிப்பை செய்கிறேன்.
அரசியலில் ரஜினி, கமல்; யாருக்கு உங்கள் ஆதரவு?
நடிப்பில் இருவரையும் எனக்கு பிடிக்கும். அரசியலில் இருவரையுமே ஏற்றுக் கொள்ள, எனக்கு உடன்பாடு இல்லை.
எந்த மாதிரி பெண்ணை எதிர்பார்க்கிறீர்கள்?
எனக்கு வரும் மனைவி அன்பாக இருந்தால் போதும்.
நண்பர்களுடன், 'பார்ட்டி'க்கெல்லாம் போவீர்களா?
கடந்த, 2015ம் ஆண்டோடு மது, புகையை விட்டு விட்டேன். கபாலி படத்துடன் தீய பழக்கம் அனைத்திற்கும் விடை கொடுத்து விட்டேன்.
உங்களுக்கான ரசிகர் மன்றம் எப்போது?