தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் - சிவா கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்த படம் விவேகம். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், கருணாகரன் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருந்தது.
கடந்தாண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. தற்போது மீண்டும் அஜித் - சிவா கூட்டணியில் விஸ்வாசம் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் விவேகம் படம், கன்னடத்தில் கமாண்டோ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. 'ஹரிவு கிரியேஷன்ஸ்' நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
ஏற்கனவே கமாண்டோ டீஸர் வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.