தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள மல்டி ஸ்டார் படம் செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
லைகாவுடன் இணைந்து மணிரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்., 28-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்களை நேற்று முதல் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று அரவிந்த்சாமியின் வரதன் கேரக்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியானது. இன்று, அருண் விஜய்யின் கேரக்டரான தியாகுவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற நடிகர்களின் கேர்க்டர்கள் தினம் தினம் வெளியாக உள்ளன.