Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே மாதத்தில் நயன்தாராவின் இரண்டு படங்கள்

14 ஆக, 2018 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Nayantharas-two-movie-releasing-this-month

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகை என்று சொன்னால் அது நயன்தாரா தான் என்று உடனே சொல்லிவிடுவார்கள். எவ்வளவு கிசுகிசுக்கள் வந்தாலும் அது நயன்தாராவின் வளர்ச்சியை சிறிதும் பாதிக்காமல் இருப்பது ஆச்சரியம்தான். அவர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நயன்தாராவின் புகழ் வெளிச்சம் குறையாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' இந்த வாரம் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் கதாபாத்திரமான கோகிலா நயன்தாராதான். இன்னும் எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்தப் படம் வெளியீட்டிற்கு பிறகாவது ஏற்படுத்தும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு நயன்தாரா நடித்துள்ள மற்றொரு படமான 'இமைக்கா நொடிகள்' படமும் இந்த மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கைக்காகக் காத்திருக்கும் இப்படத்தை ஆகஸ்ட் 31 வெளியிடத் தயாராகி வருகிறார்கள்.

ஒரே மாதத்தில் நயன்தாராவின் இரண்டு முக்கியமான படங்கள் வெளிவர உள்ளது அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in