'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆனந்திக்கு கயல் படம் அடையாளம் கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்த சண்டிவீரன், விசாரணை, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இந்த படங்கள் தவிர ஆனந்தி நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதனால் அழகும், திறமையும் இருந்தும் ஆனந்தி தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் போனது.
தற்போது அவர் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில், எம்.ஜானகிராமன் இயக்கத்தில், தயாராகியுள்ள டைட்டானிக்: காதலும் கவுந்து போகும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜானகிராமன் பாலா, சுதா கொங்கரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.
ஆனந்தியுடன் கலையரசன், காளி வெங்கட், ஆஷ்னா ஜவேரி, மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி மோகனும், நடிகை காயத்ரியும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"இது முழுநீள ரொமாண்டிக் காதல் திரைப்படம். திரைக்கதை காமெடியாக நகர்ந்தாலும் நம் வாழ்வில் கடந்த சென்ற விஷயங்கள் வந்து போகும். படத்தின் கிளைமாக்ஸ் அதிர்ச்சி தரும் சீரியசாக இருக்கும். சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிற படமாக இது உருவாகி உள்ளது" என்கிறார் இயக்குனர் ஜானகிராமன். ஆனந்தியை. டைட்டானிக் கரை சேர்க்குமா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.