‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவில்லை. இந்த பாடல் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் உள்ளிட்ட சர்கார் படக்குழு அமெரிக்கா சென்றிருந்தது. இதனால், கருணாநிதியின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை.
அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்புக்காக சென்றிருந்த விஜய், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமானநிலையத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த விஜய், அங்கிருந்து நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.