வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பியார் பிரேமா காதல். அறிமுக இயக்குநர் இளன் இயக்கி இருக்கிறார். படத்தில் சில நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள் இருப்பதால் இது கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சுசீந்திரன் கூறியிருப்பதாவது...
முதல் தயாரிப்பிலேயே யுவன் வெற்றி பெற்றுள்ளார். இயக்குநர் தன் வசனங்கள் மூலம் காட்சியை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமே யுவனின் இசை. இரண்டாவது ஹரிஸ் கல்யாணின் எதார்த்தமான நடிப்பு. இப்படியும் ஒரு கலாச்சாரம், காதல் இருப்பதையும், இளன் கடைசி 20 நிமிடங்களில் அதில் இருக்கும் உணர்வுகளையும் தெளிவாகப் பதிவு பண்ணியுள்ளார்.
இந்தப்படத்தை கலாச்சாரச் சீரழிவு என்றும் கூறலாம். இப்படியொரு கலாச்சார காதல் நடைமுறையில் இருக்கிறது என்று வாதம் செய்யலாம். ஒட்டுமொத்தத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தந்துள்ளனர்.
இவ்வாறு சுசீந்திரன் கூறியுள்ளார்.