'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் ஜோடிகள் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிக்கும் படம் பியார் பிரேமா காதல். இளன் என்ற புதுமுகம் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசை அமைக்கிறார், ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற 9ந் தேதி படம் வெளிவருகிறது. படத்தில் நடித்திருப்பத பற்றி ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:
இது வெறும் இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் இருக்க யுவன் விரும்பவில்லை. படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிரூபித்தார். அவரது சமரசமற்ற தன்மை தான் படத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறது.
எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ் என ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்கிற கதை. ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆசையில் விதவிதமான உடைகள் அணிவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும் என்றார் ஹரிஷ்.