தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரைப்படங்களுக்கு தியேட்டர் வினியோகம், வெளிநாட்டு தியேட்டர் வினியோகம் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தது. அதன்பின் தனியார் டிவிக்கள் வந்த பிறகு சாட்டிலைட் உரிமை அவர்களுக்கு ஒரு முக்கியமான வருமானத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், கடந்த ஓரிரு வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களுக்கும், நன்றாக ஓடிய படங்களுக்கும் மட்டுமே சாட்டிலைட் உரிமையில் நல்ல விலை கிடைத்தது. பல நூறு படங்களின் சாட்டிலைட் உரிமை இன்னும் விற்கப்படாமலேயே உள்ளது.
ஆனால், கடந்த வருடம் முதல் டிஜிட்டர் உரிமையும் புதிதாக தயாரிப்பாளர்களுக்கு ஒரு நிறைவான வருமானத்தைத் தந்து வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் சில படங்கள் சாட்டிலைட் உரிமையை விட அதிகமான விலைக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
கடந்த வருடம் கார்த்தி நடித்து வெளிவந்த படமான 'தீரன் அதிகாரம் ஒன்று', அதிதி நடித்து வெளிவந்த 'அருவி' ஆகிய படங்கள் ஒரு மாதத்தில் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இப்போது 'கடைக்குட்டி சிங்கம்' படமும் வெளியான ஒரு மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதியன்று அமேசான் பிரைமில் 'கடைக்குட்டி சிங்கம்' வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.