ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாமி படத்தை அடுத்து விக்ரம் - ஹரி கூட்டணி இணைந்துள்ள படம் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு நாயகியாக அதாவது த்ரிஷா நடிக்க மறுத்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த வேடத்தில் தான் நடித்தது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, சாமி படத்தில் த்ரிஷா நடித்ததைப்பார்த்து வியந்திருக்கிறேன். அவர் அந்த படத்தில் செய்த மேஜிக்கை இன்னொருவரால் செய்வது கடினம். அதனால் சாமி-2 படத்தில் த்ரிஷா வேடத்தில் நடிக்க என்னை அழைத்தபோது தயங்கினேன். என்றாலும் டைரக்டர் ஹரி நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் இந்த படத்தில் நடித்துள்ளேன். துருவநட்சத்திரம் படத்தை அடுத்து இந்த படத்திலும் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கிறேன்.
சாமி ஸ்கொயர் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடத்தில் அவர் நடித்ததைப்பார்த்து, இது கீர்த்தியா இல்லை சாவித்ரி அம்மாவா? என்கிற குழப்பம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு பிரமாதமாக நடித்திருந்தார். அந்த படத்தைப்பார்த்ததில் இருந்து நான் கீர்த்தி சுரேஷின் ரசிகையாகி விட்டேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.