புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
வெற்றிமாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கும் படம் அண்ணனுக்கு ஜே. இதனை வெற்றிமாறனே தயாரிக்கிறார். தினேஷ், மகிமா நம்பியார், ஆர்ஜே.பாலாஜி, மயில்சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி ராஜ்குமார் கூறியதாவது :
படத்தின் தலைப்பை பார்த்ததும் எளிதாக அரசியல்படம் என்பது புரிந்து விடும். ஆனால் இது நேரடியாக எந்த அரசியல் கட்சியையோ, தலைவரையோ குறிப்பிடும் அரசியல் படம் அல்ல. எல்லா ஊர்களிலும் அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை பற்றி பேசுகிறது படம். தலைவர்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் தொண்டன் மட்டும் அப்படியே இருப்பான். போஸ்டரில் பெயர் வருவதோடு திருப்திப்பட்டு விடுவான். அப்படி ஒரு தொண்டனின் கதை இது. உலக அரசியலையும் மறைமுகமாக படம் பேசும்.
இதில் தினேஷ் மரம் ஏறுபவராக நடிக்கிறார். இதற்காக பயிற்சி எடுத்து பல காட்சிகளில் ஒரே ஷாட்டில் பனைமரத்திலும், தென்னை மரத்திலும் ஏறினார். கிராமத்து துறுதுறுப்பான கேரக்டருக்கு மகிமா அப்படி ஒரு பொருத்தமாக இருப்பார். கதை எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்துகிற மாதிரி இருக்கும். என்றார்.