டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெங்களூர் நாட்கள், தோழா என தமிழில் வெளியான சில படங்களுக்கு இசையமைத்தவர் பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர். ஆனால் மலையாளத்திலோ இவர்தான் மோஸ்ட் வான்ட்டேட் இசையமைப்பாளர். மலையாளத்தில் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் தமிழில் இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறிவருவதை பார்த்து இவருக்கும் அந்த ஆசை வந்துவிட்டதோ என்னவோ தற்போது டோல்கேட் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.
ஹரிகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கோபிசுந்தரின் நண்பரும் நடிகருமான துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். மேலும், "இசையில் முத்திரை பாதித்தது போல நடிப்பிலும் முத்திரை பதிப்பார் " என கோபிசுந்தரை பாராட்டியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக பூர்ணா நடிக்கிறார்.