பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு |
விஜய் ஆண்டனி பிலிம் பேக்டரி சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் திமிரு புடிச்சவன். விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நம்பியார் படத்தை இயக்கிய கணேசா இயக்குகிறார்.
டாக்டர், வழக்கறிஞர், தாதா, அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல கேரக்டர்களில் நடித்து விட்ட விஜய் ஆண்டனி, இதில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷ்னும், சென்ட்டிமென்ட்டும் கலந்த இன்ஸ்பெக்டர் வேடம் அவருக்கு.
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் படங்கள் எதுவும் பெருசாக பேசப்படவில்லை. அதனால் இந்தப் படத்தை மிகுந்த கவனத்துடன் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
போலீஸ் கேரக்டர் என்பதால் சண்டை காட்சிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியை மட்டும் 15 நாட்கள் படமாக்கி உள்ளனர். கடந்த மாதமே வெளிவருதாக இருந்த படத்தில் பல புதிய விஷயங்களை சேர்த்ததால் சற்று தாமதமாகியிருக்கிறது. தற்போது படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு பிறகு விஜய் ஆண்டனி கொலைகாரன் படத்தில் நடிக்கிறார்.