கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தெலுங்கை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த பாலியல் இம்சைகளை பட்டியலிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி... என அவரின் பட்டியல் நீண்டு கொண்டு இருக்கின்றன.
இதற்கு ஸ்ரீரெட்டிக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இந்த விவகாரத்தில் விஷால் தன்னை மிரட்டுவதாக பேஸ்புக்கில் குற்றம் சாட்டியிருந்தார் ஸ்ரீரெட்டி.
இந்நிலையில் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் ஸ்ரீரெட்டி, விஷாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறுகையில், என்னை மன்னித்து விடுங்கள் விஷால். நடிகைகளுக்கு நிகழும் அநீதிகளை தட்டிக்கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்திருக்கிறார்.