தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் 'ஜுங்கா' படம் இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து '96', 'செக்கச் சிவந்த வானம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'சீதக்காதி' ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் 'ஒரு பக்க கதை' ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி' படத்தின் மேக்கிங் டீஸரை சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் வெளியிட்டனர்.
இந்தப் படத்தில் ஓல்டு கெட்டப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி மேக்கப்புக்காக கடுமையாக மெனகெட்டிருக்கிறார். இத்தனை மெனகெட்டு நடித்தும் விஜய்சேதுபதி படங்களின் வர்த்தக மதிப்பு இன்னும் உயரவில்லை. அது அவரை கடுப்பாக்கியுள்ளது.
எவ்வளவு செலவு செய்து படம் எடுத்தாலும் விஜய்சேதுபதியின் படத்துக்கு இவ்வளவுதான் பிசினஸ் என்று என்னுடைய மார்க்கெட்டை யாரோ தீர்மானிக்கிறார்களே... என ஜுங்கா படவிழாவில் ஆதங்கப்பட்டார் விஜய்சேதுபதி.