'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ் படங்களை முடித்து விட்ட விஜயசேதுபதி, செக்கச்சிவந்த வானம், சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் நடித்து வந்தவர், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் கலந்து கொள்கிறார்.
ரஜினியுடன் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது, ரஜினி ஒரு பல்கலைக்கழகம். அதில் நான் ஒரு மாணவன். கார்த்திக் சுப்பராஜின் கப்பலில் ஒரு பயணியாக நானும் பயணிக்கப்போகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.