பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க, காஜல்அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றது. அதையடுத்து காஜல் அகர்வால் அங்கிருந்து திரும்பி விட்டார்.
இந்த நிலையில், தற்போது குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மகாலட்சுமியில் நடித்து வரும் தமன்னாவும் ஐரோப்பாவில் காஜல் அகர்வால் நடித்த அதே லொகேசனில் தற்போது முகாமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் குயின் ரீமேக் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளும் ஐரோப்பாவில் ஒரே லொகேசனில் தான் படமாக்கப்படுகிறதாம்.