டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளிவந்த 'காலா' படம் பல்வேறு காரணங்களால் தோல்வியைத் தழுவியது. அந்தப் படம் பற்றிய பரபரப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்தது. வழக்கமாக ரஜினிகாந்த் படத்தைச் சென்று பார்ப்பவர்கள் கூட 'காலா' படத்தைப் பார்க்கப் போகவில்லை. அதனால், படம் பெரிய தோல்வியைத் தழுவியது. இருப்பினும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
'காலா' படத்தின் தோல்வி அந்தப் படத்தில் நாயகியாக நடித்த ஹூமா குரேஷிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் குறிப்பிடத்தக்க நடிகையாக இருந்தாலும் அவருக்கு அங்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால், ரஜினிகாந்தின் காதலியாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி படம் என்றால் ரசிகர்களிடம் எளிதில் சென்றடையலாம் என்ற நம்பிக்கையுடன் தென்னிந்தியா பக்கம் வந்தார்.
இப்போது அவரை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். ஆனால், அவர் கேட்கும் சம்பளம் அதிகமாக இருக்கிறது என தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஹூமா சம்பளத்தைக் குறைத்தால் மட்டுமே அந்த வாய்ப்பைப் பெற முடியும். இல்லை என்றால் வேறு நாயகியைத் தேர்வு செய்யவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம்.