ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி கதாநாயகனாகவும், அவரது மகன் ஆரவ் ரவி, அவரது மகனாகாவே நடித்துள்ள 'டிக் டிக் டிக்', கடந்த வாரம் 22-ம் தேதி வெளியானது. இரும்புத்திரை படத்துக்குப் பிறகு கமர்ஷியல் ஹிட் என்ற பெயரைப் பெற்றுள்ளது இந்தப்படம்.
'டிக் டிக் டிக்' ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிப் படமானதை விட, தன்னுடைய மகன் நடித்த முதல் படம் வெற்றியடைந்ததை எண்ணி ஜெயம் ரவிக்கு ஏக சந்தோஷம்.
மோகன்ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி கதாநாயகனாக நடித்து அறிமுகமான 'ஜெயம்' படம் 2003, ஜூன் மாதம் 20-ஆம் தேதி வெளியானது.
'ஜெயம்' ரவி கதாநாயகனாக அறிமுகமாகி 18 ஆண்டுகளாகிவிட்டநிலையில், 'ஜெயம்' ரவியுடன் அவரது மகன் ஆரவ் ரவி நடித்து அறிமுகமாகியுள்ள 'டிக் டிக் டிக்' கடந்த வாரம் அதாவது, ஜூன் மாதம் 22-ம் தேதி வெளியானது.
'ஜெயம்' ரவி சினிமாவில் ஜூன் 20-ஆம் தேதி அறிமுகமானார். அவரது மகனோ ஜூன் 22-ஆம் தேதி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். இது தற்செயலாக அமைந்த விஷயம் என்றாலும் அப்பா, மகனான 'ஜெயம்' ரவி, ஆரவ் ரவி இருவருக்கும் மகிழ்ச்சியை தரும் விஷயமாக அமைந்துள்ளது.