Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சின்னபட்ஜெட்டில் தயாராகும் 'நயன்தாரா-63'

22 ஜூன், 2018 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-63-movie-is-low-budget-film

சில வருடங்களுக்கு முன்புவரை தமிழில் தொடர்ச்சியாக நடிக்காமல் எப்போதாவது ஒரு படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. தெலுங்கில்தான் அவருடைய கவனம் இருந்தது. இப்போது நயன்தாராவின் முழுகவனமும் தமிழில்தான்.

'விஸ்வாசம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' என்று பல படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப்பட்டியலில் 'லட்சுமி' என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான கே.எம்.சர்ஜுன் இயக்கும் புதிய படமும் இணைந்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் 'அறம்' படத்தை தயாரித்த 'கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதனால் 'நயன்தாரா-63' என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை! என்றாலும் இந்த படத்தில் நயன்தாரா தவிர படத்தில் பணிபுரியும் நடிகர் நடிகை அனைவரும் புதுமுகங்கள் என்றும், தொழில்நுட்பக்கலைஞர்களும் புதுமுகங்கள்தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி என்ற வளர்ந்து வரும் இசை அமைப்பாளரே இசையமைக்கிறார். இவர் 'கிரகணம்' என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளர்! இந்த படத்தில் நயன்தாரா வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இது கமர்ஷியல் படம் இல்லை என்பதால் சின்ன பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in