‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காலா' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரேகட்டமாக 40 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளும் எடுக்கப்பட உள்ளன.
பீட்டர் ஹெய்ன் இந்தப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார். ரஜினியுடன் 'சிவாஜி', 'எந்திரன்', 'கோச்சடையான்' ஆகிய படங்களில் பீட்டர் ஹெய்ன் ஏற்கெனவே ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படம் மூலம் ரஜினிகாந்தும், பீட்டர் ஹெய்னும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்கள்!
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என்று அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார் பீட்ட ஹெய்ன். பெப்சி அவருக்கு பிரச்சனையைக் கொடுத்ததால் ஐதராபாத்திலேயே செட்டிலாகி தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில்தான் ரஜினி பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரிஸ்க்கான சண்டையை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாராம் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.