'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மிர்ச்சி சிவா நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கிய படம் தமிழ்படம். தமிழ் சினிமா படங்களை ஒட்டுமொத்தமாக கிண்டலடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.
சிவா மீண்டும் நடிக்க, அமுதன் இயக்கி, ஒய்நாட் ஸ்டுடியோ சசி தயாரித்துள்ளார். இந்தபடமும் நிகழ்காலத்திற்கு ஏற்றபடி கிண்டல் செய்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரும் ரசிகர்களை ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
இந்தப்படத்திற்கு தமிழ்ப்படம் 2.0 என தலைப்பு வைத்திருந்தனர். ரஜினியின் 2.0 படத்தை கிண்டல் செய்யும் விதமாக இதன் தலைப்பு இருந்தது. இந்நிலையில் திடீரென இபடத்தின் தலைப்பில் இருந்த 0 நீக்கிவிட்டனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சசி வெளியிட்டுள்ள செய்தியில், "ஜீரோவிற்கு மதிப்பில்லை என்பதால் அதை மட்டும் நீக்குகிறோம். இனிமேல் படத்தின் தலைப்பு தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்" என தெரிவித்திருக்கிறார்.