ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காலா ரிலீஸான கையோடு கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் ஒரு மாத காலம் நடக்கிறது.
இந்த படப்பிடிப்புக்காக ரஜினி, கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற ஓட்டலில், டைரக்டர்ஸ் பங்களா இல்லத்தில் தங்கியிருக்கிறார்.
ரஜினி தங்கியதால் இந்த ஓட்டல் பிரபலமாகி உள்ளது. இதனால், ரஜினி தங்கிய அந்த விடுதிக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் மாற்றி இருக்கிறார்கள்.
இதுகுறித்து அந்த ஓட்டலின் இயக்குநர் மேகுல் பரேல் கூறுகையில், எங்கள் ஓட்டலில் ரஜினி தங்கியது மிகப்பெரிய கவுரவம். அவரது நினைவாக ஒரு மரம் நட்டுள்ளோம். அவர் தங்கிய விடுதி இனி ரஜினிகாந்த் வில்லா என்றே அழைக்கப்படும் என்கிறார்.