தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டிராபிக் ராமசாமி படத்தில் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார் விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த படத்தின் ஆடியோ விழாவின்போது போராடினால் நாடே சுடுகாடாகி விடும் என்று ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரது பேச்சை விமர்சனம் செய்தார்.
தற்போது ரஜினியின் காலா படத்தை விட விஜய்யின் மெர்சல் தான் சிறந்த படம் என்றொரு செய்தியை வெளியிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதையடுத்து ரஜினி ரசிகர்கள் இணையதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மெர்சல் படத்தை கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு அவர்களுக்கு பதிலடி கொடுக்க, இரண்டு பேரின் ரசிகர்களுக்குமிடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது.