தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரும்பாலும் நடிகைகளில் பலர், சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் தங்களது அழகு, உடற்கட்டு விஷயங்களில் அவ்வளவாக கவனம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நான்கு ஆண்டுளுக்கு முன் அழகுப்புயலாக வலம் வந்த நடிகை நஸ்ரியாவும், இந்தப்பட்டியலில் ஒருவராகவே இடம் பிடித்தார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டபின், இனி எங்கே சினிமாவில் நடிக்கப் போகிறோம் என நினைத்தாரோ என்னவோ உடம்பை கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால் கொஞ்சம் பெருத்து விட்டார்.
அவரை மீண்டும் தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க நினைத்த பெங்களூர் டேய்ஸ் பட இயக்குனர் அஞ்சலி மேனன், நஸ்ரியாவை நீண்ட நாள் கழித்து சந்தித்தபோது, "என்னம்மா இப்படி குண்டுமணி மாதிரி ஆகிட்டே" என அதிர்ச்சியானாராம்.
அதன்பின் தனது படத்தில் நடிக்க நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்த அவர், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் சில பயிற்சிகள் தந்து, நஸ்ரியாவை ஓரளவு ஸ்லிம் ஆக்கி நடிக்க வைத்துள்ளாராம். தற்போது அஞ்சலி மேனன் டைரக்சனில் பிருத்விராஜின் தங்கையாக கூடே என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார் நஸ்ரியா.