'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன், தசாவதாரம் படத்தில், 10 விதமான, 'கெட்டப்'புகளில் நடித்தார். அதையடுத்து இப்போது, மிர்ச்சி சிவா நடித்து வரும், தமிழ்ப்படம்--2 என்ற படத்தில், காமெடியன் சதீஷ், 10 வேடங்களில் நடிக்கிறார். கதைப்படி, இந்த படத்தில் காமெடி வில்லனாக நடிக்கும் அவர், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான, 'கெட்டப்'புகளில் வந்து, நாயகன் சிவாவை மிரட்டுகிறார். இந்த, 'கெட்டப்'புகளுக்காக தன், 'பாடி லாங்குவேஜை' மாற்றி, முதன் முறையாக அதிக, 'ரிஸ்க்' எடுத்து நடித்திருக்கிறார் சதீஷ். அதோடு, 'நான் காமெடியனாக நடித்த போது என்னைப் பார்த்து பெரிதாக சிரிக்காத ரசிகர்கள், இந்த படத்தில் என் வில்லன் நடிப்பைப் பார்த்து, சிரிக்கப் போகின்றனர்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா