மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
காளி படத்தை அடுத்து பிரவீன் பிகாட் என்ற அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கிறார் அஞ்சலி. முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படவிருக்கும் இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம்.
இந்த படத்திற்கு 'ஒ' என்று ஒற்றை எழுத்தில் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஏஜே பிலிம் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிஷ்கினின் ஆஸ்தான இசையமைப்பாளர் அரோல் கரோலி இசை அமைக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த 'ஜி', ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா நடித்த 'ஈ' தற்போது மைக்கேர் ராயப்பன் தயாரிப்பில் வளர்ந்து வரும் 'கீ' ஆகிய படங்கள் ஒற்றை எழுத்தை தலைப்பாக கொண்ட படங்கள்.
இந்தப்படங்களில் வரிசையில் இப்போது அஞ்சலி நடிக்கும் இந்த 'ஒ' படமும் இடம் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் அஞ்சலி தவிர மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.