இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, நிவேதா பெதுராஜ் இணைந்து நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வருகிற 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க இருந்தார் 'ஜெயம்' ரவி. ஆனால் அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஆர்யா அதை கைவிட்டு வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயம்ரவியும் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது டிக் டிக் டிக் படத்தை அடுத்து 'அடங்க மறு' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம்ரவி.
இந்தப் படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இவர் ஜெயம்ரவியின் மாமியார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை மருமகனுக்காக மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.