'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பெரும் நட்சத்திரக்கூட்டமே நடிக்கும் படம் 'வட சென்னை'.
காலா' படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 'வட சென்னை' படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டிரைலரை ஜூலை 28-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக படம் செப்.,13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி அன்று வெளியாகலாம் என தெரிகிறது.
இதேதினத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சீமராஜா படமும் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி அன்று சீமராஜா படத்தை வெளியிட இருப்பதை முன்கூட்டியே சிவகார்த்திகேயன் தரப்பு அறிவித்துவிட்டது. இந்நிலையில் தன்னுடைய படத்தையும் அதே தேதியில் திரைக்குக் கொண்டுவர தனுஷ் முடிவு செய்துள்ளார்.