பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவருவது புதிய விஷயமில்லை. சில வருடங்களுக்கு முன் மணிரத்னத்தின் வாழ்க்கை வரலாறு கூட புத்தகமாக வெளியானது.
அந்த வரிசையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறும் புத்தகமாகி இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறை கிருஷ்ண திலோக் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
NOTES OF A DREAM என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தமாக உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பிரபல பதிப்பாளரான பெங்குவின் (PENGUIN RANDAOM HOUSE INDIA) வெளியிடவிருக்கிறது. இந்த புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
24 வயதே ஆன கிருஷ்ண திலோக் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தில் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இயக்கிய டானி பாயல் அணிந்துரை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பயனுள்ள ஒரு புத்தகமாக இருக்கும் என்கின்றனர் பதிப்பாளர்கள். அதுமட்டுமல்ல ஏ.ஆர். ரஹ்மான் பற்றி மக்கள் அறிந்திராத பயனுள்ள பல தகவல்கள் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும் என்று நம்பலாம்.