ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்து வரும் 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22-ஆம் தேதி முடிவடைகிறது.
திட்டமிட்ட தேதிக்குள் படத்தை முடித்தாக வேண்டும் என்பதற்காக இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 'களவாணி' படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் 'களவாணி-2' படத்திலும் நடிக்கிறார்கள்.
களவாணியில் காமெடியனாக நடித்த சூரி ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார். கடைசிநேரத்தில் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னை காரணமாக 'களவாணி-2'வில் சூரி நடிக்கவில்லை.
சூரி நடிக்கவில்லை என்றதும் அவருக்கு பதிலாக விமலின் நண்பராக ஆர்.ஜே.விக்னேஷ் நடிக்கிறார். சற்குணம் அழைத்ததும் மறுபேச்சு பேசாமல் தஞ்சாவூருக்கு கிளம்பிவந்து களவாணி-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் ஆர்.ஜே.விக்னேஷ். இந்தப்படம் அவருக்கு பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்கிறார் சற்குணம்.