ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பார்வைற்றவர்களின் காதலை சொன்ன குக்கூ, நாட்டு நடப்புகளை நையாண்டி செய்த ஜோக்கர் படங்களை இயக்கிய பத்திரிகையாளர் ராஜு முருகன், அடுத்து இயக்கும் படம் ஜிப்ஸி. ஜீவா கதையின் நாயகனாகவும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த மாடல் அழகி நடாஷா சிங் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், யுகபாரதி பாடல்களை எழுதுகிறார், எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
ஜிப்ஸி என்றால் பயணி என்று பொருள். இது காரைக்காலில் தொடங்கி இந்தியா முழுக்க பயணிக்கிற ஒரு பயணக்கதை. கதை பயணிக்கும் எல்லா இடங்களுக்கும் இயக்குனர் ராஜு முருகன் பயணம் செய்து அந்த பயண அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இங்கு 20 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடக்கிறது.