Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கி - கும்கி-2 : யானை மட்டுமே ஒற்றுமை

11 ஜூன், 2018 - 18:54 IST
எழுத்தின் அளவு:
Kumki---Kumki-2-difference

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மிமேனன் நடித்த படம் - 'கும்கி'. 2012ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான கும்கி படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து தற்போது உருவாகி வருகிறது. ஆனால், 'கும்கி' படத்துக்கும் கும்கி -2 படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவாகும் நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் 'கும்கி 2' படத்தின் கதை யானை மட்டுமே இரண்டு படங்களுக்குமான ஒரே தொடர்பு.

கும்கி - 2 படத்தில் நடிக்கவேண்டிய குட்டி யானையை தாய்லாந்தில் கண்டுபிடித்து முதல் இரண்டு கட்டப் படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக 'கும்கி 2' டீம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

கும்கி படத்தில் நடித்த யாருமே இந்தப்படத்தில் நடிக்கவில்லை. முற்றிலும் வேறொரு நட்சத்திரங்களை வைத்து இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in