ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாகை சூடவா படத்தின் மூலம் புகழ் பெற்றவர் இனியா. தற்போது வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ஆல்பத்தின் தலைப்பு மியா. "வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா..." என்று அந்த பாடல் வரிகள் தொடங்குகிறது. அஸ்வின் ஜான்சன் இசை அமைத்துள்ளார்.
ஆல்பம் பற்றி இனியா கூறியதாவது: இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி. இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன். இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளேன். இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம். இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியாவை காணிக்கையாக்குகிறேன். என்றார் இனியா.