விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தென்னிந்தியத் திரையுலகில் இந்த 2018-ம் ஆண்டின் இதுவரையில் வெளிவந்த படங்களை வைத்துப் பார்க்கும் போது சமந்தா தான் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். அவர் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.
தெலுங்கில் 'ரங்கஸ்தலம், மகாநதி', இரண்டுமே வசூலை அள்ளிய படங்கள். இதில், 'மகாநதி' தமிழில் டப்பிங் ஆகி 'நடிகையர் திலகம்' ஆக வெளியானது. இதுவும் வசூலில் மோசமில்லாத படமாக அமைந்தது. தமிழில் சமந்தா நடித்து வெளியான 'இரும்புத்திரை' 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்தப் படம் தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி அங்கு 12 கோடி வசூலைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று நேரடிப் படங்கள், இரண்டு டப்பிங் படங்கள் என ஐந்து படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்து ஆச்சரியப்படுத்திவிட்டது.
இப்போது தமிழில்தான் சமந்தாவுக்கு மூன்று படங்கள் அடுத்தடுத்து வரவேண்டி உள்ளது. “சூப்பர் டீலக்ஸ், சீமராஜா, யு டர்ன் தமிழ் ரீமேக்' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வந்துவிடும். இவற்றில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக சமந்தா டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டார். 'யு டர்ன்' தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படங்களும் சமந்தாவுக்கு வெற்றி பெற்றால் 2018ன் டாப் ஸ்டார் சமந்தா தான்.