ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷ், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஒரு கேரக்டரில் தானும் நடிக்க ஆசைப்பட்டார் தனுஷ். ஆனால் ரஜினி வேண்டாம் என கூறிவிட்டார்.
இந்நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனுஷூக்கு உள்ளதாம். ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து பவர்பாண்டி படத்தை இயக்கிய அவர், ரஜினிக்காக ஒரு கதை ரெடி பண்ணி வைத்துள்ளாராம். ஆனால், தற்போது ரஜினி அரசியல் பணிகளில் தீவிரமடைந்து விட்டதால் தான் அந்த முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளாராம் தனுஷ்.
தற்போது வடசென்னை, மாரி-2 உள்பட சில படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக நாகார்ஜூனாவை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.