இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காலா, 2.ஓ படங்களை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறர் ரஜினிகாந்த். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டார் கார்த்திக் சுப்பராஜ்.
இந்த நிலையில், தற்போது படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் தீவிர மடைந்துள்ளார். அந்த வகையில், இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது.
அதையடுத்து சிம்ரன், பாபிசிம்ஹா என சிலரது பெயர்கள் வெளியானது. அவர்களில் சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த செய்தியை மறுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
ரஜினி படத்தைப்பொறுத்தவரை விஜய் சேதுபதி மட்டும் தான் உறுதியாகியிருக்கிறார். மற்ற கேரக்டர்களில் நடிப்பவர்கள் இன்னும் பரிசீலனையில் தான் இருக்கிறார்கள். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.