இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான 'மிருதன்' படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இணைந்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. ஹிதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார்.
மற்றும், அரோன் அசிஸ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ் நடிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். டி.இமான் இசை அமைக்கும் 100-ஆவது படமான இப்படம் பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடவையாவது திட்டமிட்ட தேதியில் 'டிக் டிக் டிக்' படம் வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. ஜூன் 22-ஆம் தேதி உறுதியாக படம் ரிலீஸாகும் என்று சொல்கிறார் 'டிக் டிக் டிக்'. தயாரிப்பாளர்.
இந்த படத்தை தமிழகம் முழுக்க ஸ்கிரீன் அண்ட் சீன் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை வெளியிட்டு பெரிய லாபம் பார்த்த கம்பெனி இது. அந்தப் பணத்தில்தான் இப்போது 'டிக் டிக் டிக்' படத்தை வாங்கியுள்ளது.