துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து, அவரே இயக்கி வரும் படம் காஞ்சனா-3. இந்த படத்தில் ஓவியா, வேதிகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்திற்கு, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 50 சதவிகித படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் காஞ்சனா -3 படத்திலிருந்து விலகிவிட்டார் வெற்றி.
அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்தார் வெற்றி. காஞ்சனா-3 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் சில மாதம் தள்ளிப் போனது.
அதனால் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டது. காஞ்சனா-3 படமா? விஸ்வாசம் படமா என்ற சூழல் ஏற்பட்டநிலையில், விஸ்வாசம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டும் என்பதற்காக காஞ்சனா-3 படத்திலிருந்து விலகிவிட்டார்.
எனவே காஞ்சனா-3 படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை படம் பிடிக்கும் பொறுப்பை சர்வேஷ் முராரியிடம் ஒப்படைத்துள்ளார் லாரன்ஸ்.
இவர் யார் தெரியுமா?
ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.